கொரோனா வைரஸின் தற்போதைய சூழ்நிலையின்படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு இரண்டு நாட்களுக்கு அல்ல, இரு வாரங்களுக்கு அமுல்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் வேட்பாளர், டாக்டர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், நோய் பரவுவதைப் பார்த்த பிறகு, எல்லா நாடுகளிலும் நோயாளர்கள் 50-60 பேர் வரை பதிவாகியிருந்த பின்னர் நோயாளர்களின் எண்ணிக்கையில் கடும் அதிகரிப்பு நிலவியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சீனா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இதை காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே வைரஸ் உடலில் இருக்கும்போது, நம்மில் நிறைய பேர் சுற்றிக் கொண்டிருக்கலாம். என்றும், எனவே இரண்டு வாரங்களுக்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது சிறந்தது என தாம் கருதுவதாகவும் டாக்டர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய நோயாளர்கள் பதிவாகாத நிலையில் நாடு உருவாகும் போதே தேர்தலுக்காக திகதி தீர்மானிக்க வேண்டும் என்பதே எனது கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்துகொண்டபோதே அவர் இவற்றினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.