கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 180ற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணம், மன்னார், பண்டாரவளை, ஹப்புத்தளை, தம்புள்ளை, வலஸ்முல்ல, நல்லதண்ணி, அம்பாறை, உஹன, பண்டாரகம, அக்மீமன, கருவலகஸ்வெவ உள்ளிட்ட பகுதிகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.