மார்ச் மாதம் 20 ஆம் திகதி, அதாவது நேற்றைய நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,840 ஆக உயர்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 என்றாலும், இறப்பு வீதம் அச்சுறுத்தும் அளவில் உள்ளது.
சுவிட்சர்லாந்தில் இறப்பு வீதம் 74 சதவிகிதமாக உள்ள நிலையில், தற்போது இத்தாலியில் இறப்பு விகிதம் 43 சதவிகிதமாகவும், சீனாவில் 4.4 சதவிகிதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணம் இத்தாலிய மொழி பேசும் டிசினோ மாகாணம்.
அங்கு 100,000 பேருக்கு 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதைத் தொடர்ந்து, Vaudஇல் 148 பேரும், பேஸலில் 145 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெனீவாவில் 100,000 பேருக்கு 70 பேருக்கும், சூரிச்சில் 36 பேருக்கும், பெர்னில் 25 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது.
சராசரியாக, சுவிட்சர்லாந்தில் 100,000 பேரில் 56 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.