பாகிஸ்தான் நாட்டில் உள்ள குயெட்டா நகரில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் இருக்கும் திகாரி என்கிற பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கமானது செயல்பட்டு வருகிறது.
இந்த சுரங்கத்தில் நேற்று பணியாளர்கள் நிலக்கரியை வெட்டியெடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தீடீரென பலத்த சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் ஓலமிட்டுள்ளனர்.
இவர்கள் இடிபாடுகளில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், இது குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், 7 தொழிலாளர்கள் பலியான நிலையில், 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். காயமடைந்த நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மீத்தேன் வாயு வெளியப்பட்டது விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.