பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்களின் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டம் அலரிமாளிகையில் நடைபெறுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் உத்திகள், நாடாளுமன்றத்தை கூட்டுவதா இல்லையா என்கிற முடிவுகள் இந்த சந்திப்பில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


















