சவுதி அரேபியாவில் அடுத்த 21 நாட்களுக்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் அனைவருக்கும் 10,000 ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்று நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
கொடிய கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அடுத்த 21 நாட்களுக்கு ஒவ்வொரு இரவும் காலை 6 மணி வரை இரவு 7 மணி முதல் 11 மணி நேரம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வீட்டிலே தங்குமாறு சவுதி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். தேவைப்படாவிட்டால் வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஊடரங்கு சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறினால் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இரண்டாவது முறையாக மீறுபவர்களும் ஆரம்ப அபராதத்தின் இருமடங்கு தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னர் பாதிக்கப்பட்ட நபர்களுடன் மக்கள் நேரடியாக தொடர்பு கொண்டதன் விளைவாக நாட்டில் முப்பத்து மூன்று சதவீத கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.