இந்தியாவில் இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அந்தவகையில் நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி மருத்துவர்களான நாங்கள் குடும்பத்தாரிடம் இருந்து விலகியே இருக்க வேண்டிய சூழல் இருக்கும் போது, பலரும் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிவதாக மருத்துவர் ஜீவேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊரடங்கு ஆணை என்பது, உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பதற்கு என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது உண்மையில் வேதனையாக இருக்கிறது என்கிறார் மருத்துவர் ஜீவேந்திரன்.
மேலும் இதுகுறித்து காணொளி ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார் .