கொரோனா வைரஸிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு தனது பங்கு ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்திருந்த கோடீஸ்வர வர்த்தகர் தம்பிக்க பெரேராவின் நிதியுதவியுடன், ஐ.டி.எச் வைத்தியசாலையில் வெண்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டன.
ஆறு வெண்டிலேட்டர் கருவிகளை நேற்று கோடீஸ்வர வர்த்தகர் ஒப்படைத்திருந்தார்.
கொரோவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்தின் மையமாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலை உள்ளது. அங்குதான் கொரோவிற்கான சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது.
தம்மிக்க பெரேராவின் நிதியுதவியுடன் வெண்டிலேட்டருடன் கூடிய ஆறு படுக்கைகள் நிறுவப்பட்டன.
இந்தவார ஆரம்பத்தில், ஆறு ஐ.சி.யூ வென்டிலேட்டர்களை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான 169 ஐ.சி.யூ படுக்கைகள் உட்பட 485 மருத்துவமனை படுக்கைகளை அனுப்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, ஆறு வெண்டிலேட்டர்கள் நேற்று அனுப்பப்பட்டன.
கொரோனாவிற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையில், முதலில் நிதியளித்த முக்கிய செல்வந்தர் தம்மிக்க பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது.