வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொற்று நீக்கும் செயற்பாட்டை மடுக்கந்த விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நகரசபையினரின் பூரண ஒத்துழைப்புடன் சுகாதாரபிரிவினரும் விசேடஅதிரடி படையினருடன் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், புகையிரத நிலையம், புதியபேருந்து நிலையம்,பழைய பேருந்துநிலையம் மற்றும் நகரில் மக்கள் கூடும் பகுதிகிளில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நகரசபையின் உப நகரபிதா சு. குமாரசாமி, அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எம்.சந்துன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் அணியும் பங்கேற்றிருந்தனர்.