கொரோனா வைரஸ் சுய தனிமைக்குள்ளாகும் அச்சத்தில் இளம் யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் நோர்போக்கைச் சேர்ந்த எமிலி ஓவன் (19) என்ற யுவதியே தற்கொலை செய்தார்.
கடந்த 18ம் திகதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் தனிமைப்படுத்தப்படுவது, அதனால் ஏற்படும் மன இறுக்கங்கள் குறித்து அவர் அதிகம் பேசி வந்ததாக, அவரது சகோதரி அன்னாபெல் தெரிவித்துள்ளார்
கொரொனா எதிரொலியாக மக்கள் வீடுகளிற்குள் முடக்கப்படுவது, அதனால் தமது திட்டமிட்ட நிகழ்வுகள் இரத்து செய்யப்படுவதால் அவர் குழப்பமடைந்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
சுயதனிமை குறித்து அவர் அதிகம் அச்சமடைந்திருந்துள்ளார். இறப்பதற்கு சில நாட்களின் முன்னதாக, தனக்கு நெருக்கமானவர்களுடன், கொரொனாவினால் ஏற்படப் போகும் தற்கொலைகள் குறித்து பேசியுள்ளார். வைரஸினால் இறப்பவர்களை விட அதிகமானவர்கள் தற்கொலையால் இறப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்றுநோயினால் உலகில் ஏற்படும் மன இறுக்கம் குறித்து, உலகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.
“மன இறுக்கம் எல்லா வடிவங்களிலும் அளவிலும் வருகிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.” என்றார்.
எமிலியின் நினைவாக பேஸ்புக் பக்கத்தில் நிதி திரட்டும் முயற்சி நடந்து வருகிறது. இதுவரை, 2,400 பவுண்ஸிற்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.