கொரோனா பரவி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அரசு எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதை மதிக்காத மக்கள் கூட்டம் ஒன்று இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பிரித்தானியாவின் பல்வேறு பல்பொருள் அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பல்பொருள் அங்காடிகளில் குவிந்துவரும் நிலையில், பல்பொருள் அங்காடிகள் கொரோனா வைரஸ் பரவும் கொரோனா மையங்களாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி, மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவேண்டி வந்தால், ஒருவரை விட்டு ஒருவர் 6 அடி தள்ளி நிற்கவேண்டும்.
ஆனால், வெளியாகியுள்ள படங்கள் பல, பல்வேறு பல்பொருள் அங்காடிகளில் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதைக் காட்டுகின்றன.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், திங்கட்கிழமையன்று, கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.
ஆனாலும், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்திக்கொண்டு மக்கள் பல்பொருள் அங்காடிகளில் குவிந்து வருகின்றனர். இதனால், பல்பொருள் அங்காடிகள் கொரோனா தொற்று பரவும் கொரோனா மையங்களாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.