வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனை பணிசெய்யவிடாது மிரட்டி, யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவுவதற்கு காரணமாக இருந்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுவீஸ் போதகர் கொரோனாவால் பாதிக்கபட்டது தெரிந்த உடனே செயலில் இறங்கியவர் வைத்தியர் கேதீஸ்வரன் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது அர்ப்பணிப்பான , முன்மாதிரியான முயற்சியில் விவரங்கள் திரட்டப்பட்டு மக்களை பாதுகாக்கும் செயல்பாடு தொடங்கியது
ஆனால் அதன் பின் இரண்டு நாட்களுக்கு பின்னே தான் போதகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டது ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள் மற்றவர்கள் (வைத்தியர் சத்தியமூர்த்தி உட்பட )
இந்த இடைப்பட்ட இரண்டு நாளும் குறித்த சபையினர் மற்றும் பலர் அவ்வாறு போதகர் கொரோனா பாதிப்புக்குள்ளாக்கவில்லை என கூறி வந்ததோடு போதகருக்கு கொரோனா இருக்கு என சொல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வந்தனர்
இதனையடுத்து யாழ் போலீஸ் அத்தியட்சர் வைத்தியர் கேதீஸ்வரனை அச்சுறுத்தியதுடன் அவரை மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அவசரகால நிலைமையில் கொரனா தொற்று ஏற்பட்டவர்கள் , ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் , ஏற்பட வாய்ப்பு இருக்கும் பிரதேசங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு அது தொடர்பான செயல்பாட்டை முன்னெடுக்க மாகாண , மாவட்ட சுகாதார துறைக்கு அதிகாரம் உள்ளது.
போதகருக்கு கொரனா இருக்கு என்று தெரிந்த சுகாதார அதிகாரி தொடர்பாக செயல்பட தொடங்கியதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் சுவீஸுக்கு போன போதகருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை தெரிந்தும் அதை மறைத்தது அந்த சபையினர் செய்த குற்றம் எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குற்றம் செய்த சபையினரை எந்த கேள்வியும் கேட்காத யாழ் போலீஸ் , குற்றமே செய்யாத வைத்தியர் கேதீஸ்வரன் மேல் நடவடிக்கை எடுக்க முற்ப்பட்டது தவறு எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதை தவறு என்று சொல்லி தட்டி கேட்க வேண்டிய யாழ் வைத்தியசாலை நிறைவாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி , தவறை கேட்க்காமல் , போலீசுக்கு ஆதரவாக போதகருக்கு கொரனா இல்லை என அறிக்கை விட்டதாகவும்,
எனினும் விஷயம் தெரிஞ்ச இலங்கை வைத்தியர்கள் சங்கம் உடனடியக செயல்பட்டு யாழ் போலீஸ் க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதை அடுத்து, வடமாகாண ஆளுநரும் யாழ் போலீசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் நாமும் வைத்தியர் கேதீஸ்வரனது கடமைக்கு குறுக்கே வந்த போலீஸ் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வயுறுத்தவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இது தொடர்பில் மக்கள் சமூகவலைத்தளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டுள்ளதுடன், வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.