அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீர்ர் Karl Anthony Townsன் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ள நிலையில் அது குறித்து Karl கண்ணீர்மல்க பேசியுள்ளார்.
பிரபல என்பிஏ வீரரான Karl Anthony Towns சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என் பெற்றோருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சில நாட்கள் ஆகியும் உடல்நலம் சரியாகாததால் மருத்துவமனைக்கு சென்றோம்.
என் தந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறிய மருத்துவர்கள் வீட்டிலேயே அவரை தனிமைப்படுத்தி கொள்ள வலியுறுத்தினார்கள்.
https://twitter.com/BleacherReport/status/1242685004645191680
ஆனால் என் தாய்க்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் பல மருந்துகள் கொடுத்தும் குணமாகவில்லை.
ஆனால் எதாவது ஒரு மருந்து தாயை குணமாக்கிவிடும் என நினைத்தும் அது நிறைவேறவில்லை.
பின்னர் அவரை கொரோனா தாக்கியது தெரியவந்தது, இதோடு கோமா நிலைக்கு என் தாய் சென்றுவிட்டார்.
ஆனால் என் தாய் மிகவும் தைரியமானவர், நிச்சயம் இதிலிருந்து அவர் விடுபடுவார்.
எல்லோரும் நான் சொல்வது என்னவென்றால், கொரோனாவை சாதாரணமாக எண்ண வேண்டாம், உங்கள் குடும்பத்தையும், நண்பர்களை பாதுகாப்பாக கவனித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.