டெல்லியில் லாக்-டவுன் உத்தரவினால் அங்கு பிழைக்க வழியில்லாமல் சாப்பாட்டுக்கே ஒன்றுமில்லாமல் தினக்கூலி ஒருவர் தன் 3 குழந்தைகளில் 1ஒன்றைத் தோளில் சுமந்தபடி மனைவியுடன் 150 கிமீ 2 நாட்கள் நடந்தே சென்று தன் கிராமத்தை அடைய டெல்லியிலிருந்து புறப்பட்டு விட்டார்.
இது தொடர்பாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான செய்திகளில் அவரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டதில், ‘நாங்கள் டெல்லியில் என்ன சாப்பிடுவது? கற்களையா? டெல்லியில் எங்களுக்கு ஒன்றுமில்லை, யாரும் உதவியும் செய்யவில்லை. கிராமத்திலாவது ரொட்டி கொடுத்து உதவி புரிவார்கள் எனவே தான் கிராமத்துக்கு நடந்தே வர முடிவெடுததோம்’ என்கிறார் பன்ட்டி என்ற அந்த தினக்கூலி.
இவரது கிராமம் டெல்லியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. நடந்து சென்றால் 2 நாட்கள் ஆகும்.
பிரதமர் மோடியும் அன்று தேசத்துக்கு உரையாற்றுகையில் வசதியுள்ளவர்கள் 9 குடும்பத்தின் உணவு தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் என்ற கோரிக்கையை வைத்தார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரும் சஹிருதய, தர்ம சிந்தனை கிராமங்களில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார், “நகரங்களில் கொஞ்சம் உணர்வு குறைவுதான், குடிமக்கள் பிறருக்கு உதவும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் உதவி நிவாரணங்களை அறிவிக்கவுள்ளது” என்றார்.
21 நாட்கள் லாக்-டவுன் காலக்கட்டத்தில் 1 கோடி பாஜக தொண்டர்கள் 5 பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.