இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் லயன்ஸ்கழகத்தின் அனுசரணையுடன் சமைப்பதற்கு தேவையான உலர்உணவுப்பொருட்கள் இருபாலை தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.
இருபாலைதெற்கு ஜே-257 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வதியும் மக்களில் நாளாந்தம் சமையல் செய்து சாப்பிடுவதற்கு அவதியுற்றுவந்த குடும்பங்களில் சமுர்த்தி உத்தியோகத்தரினால் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக உலர்உணவுப்பொருட்கள் இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நல்லூர் லயன்ஸ்கழகத்தலைவர் லயன் இ.லட்சுமிகாந்தன், இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கதலைவர் .பா.பிரதீபன்,வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்,பிரதேசசபை உறுப்பினர் ந.கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவைத்தனர்.