கொரோனோ தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் தொற்றுக்கு இலக்காகியதாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் உட்பட நாடு முழுவதும் 102 போர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தொற்றுச் சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் 32 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் எவரும் வைத்தியசாலையில் இல்லை. ஆயினும் கொரோனோ தொற்று அச்சம் நீக்கவில்லை. சந்தேசத்தின் பேரில் மேலும் அனுமதிக்கப்படலாம். ஆகவே மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு பணிப்பாளர் கேட்டுள்ளார்.