கோவிட்-19 (கொரோனா) வைரசினால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,297 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 7,503, ஸ்பெயினில் 3,647, சீனாவில் 3,287, ஈரானில் 2,077, பிரான்ஸில் 1,331, அமெரிக்காவில் 1,032 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை ஆறு நாடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவும் இன்று இணைந்தது. கொரோனா பாதிப்பிற்கான நிவாரண பணிகளிற்காக 2 ட்ரில்லியன் டொலர் ஒதுக்கும் சட்டத்தை அமெரிக்க செனட் அங்கீகரித்துள்ளது.
ஈரான்
ஈரானின் மாகாணங்களிற்கிடையிலான இன்டர்சிட்டி பயணம் தடை செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியா
கொரோனாவை கட்டுப்படுத்தும் கடுமையான நடவடிக்கைகளை நைஜீரியா எடுத்துள்ளது. நைஜீரியாவை முழுமையாக முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டை முடக்கும் பொறுப்பு இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளது. நோயுற்றவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யா
வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து வெளியேறுபவர்களிற்கு தடையில்லை.