நம் நாடு ஒரு பணக்கார நாடு என்றார் சுவிஸ் ஜனாதிபதி, கொரோனா தொற்று பரவத்துவங்கிய நேரத்தில்… இன்று, கொரோனாவால் சுவிட்சர்லாந்து பொருளாதார மந்த நிலையை நோக்கிச் செல்கிறது என எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்!
பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த சுவிஸ் ஜனாதிபதியான Simonetta Sommaruga, நாம் கொரோனா நெருக்கடியை மருத்துவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேற்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம், சுவிட்சர்லாந்து ஒரு பணக்கார நாடு, யாரையும் கைவிடமாட்டோம் என்று கூறியிருந்தார்.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவால், இந்த ஆண்டில்தானே சுவிட்சர்லாந்து பொருளாதார மந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்!
ஆனால், கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டால், 2021இல்தானே சுவிஸ் பொருளாதாரம் மீண்டும் வலிமையாக கட்டப்பட்டுவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
பேஸலை பின்னணியாகக் கொண்ட The BAK Economics Institute என்ற நிறுவனம், தனியார் செலவிடுதலில் ஏற்படும் பிரச்சினையால் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்கிறது.
குறைந்த பொருளாதார வளர்ச்சியால் வேலையில்லாத் திண்டாட்டமும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கார்ப்பரேட் வங்கிகள் திவாலாகும் நிலையும், கடன் வாங்கியவர்கள் திரும்பச் செலுத்தாத நிலையும் ஏற்படலாம்.
அப்படிப்பட்ட எதிர்மறையான நிகழ்வுகள் தொடருமானால், பொருளாதார நிலையை மீட்பது 2022இல்தான் சாத்தியம் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.