பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புடைய கர்ப்பிணி பெண், மருத்துவமனை படுக்கையில் இருந்த படி பதிவு செய்து வெளியிட்ட வீடியோ அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கென்டில் உள்ள ஹெர்ன் பேவைச் சேர்ந்த 39 வயதான கரேன் மன்னெரிங் என்ற ஆறரை மாத கர்ப்பிணி பெண்ணே குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மன்னெரிங் 3 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கேட்டின் QEQM மருத்துவமனையில் மன்னெரிங் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவில், எனக்கு 39 வயதாகிறது, நான் 26 வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக கூறினர்.
கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவுடன் இருந்தேன். சனிக்கிழமை முதல் மருத்துவமனையில் இருக்கிறேன் இன்று புதன்கிழமை ஆகிறது.
https://www.facebook.com/100002829916204/videos/2868837693220533/
எனக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா உள்ளது, எனக்காகவும் என் குழந்தைக்காகவும் நான் போராடுகிறேன்.
மக்களே தற்போது வெளியே செல்வது நல்லது அல்ல, மற்றொரு நாள் வெளியே செல்ல நேரம் கிடைக்கும்.
நான் தற்போது குடும்பத்தை பிரிந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். வீட்டில் கணவர் மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர், என்னால் அவர்களை பார்க்க முடியவில்லை.
எங்கிருந்து எனக்கு நோய்த்தொற்று எற்பட்டது என தெரியவில்லை, ஆனால் எனது உடல்நலம் மிகவும் மோசமடைந்துவிட்டது என மருத்துவமனை படுக்கையில் மூச்சுதிணறிய படி தனது துயரத்தை பகிர்ந்துள்ளார் கரேன் மன்னெரிங்.