கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈராக்கிலிருந்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பீதியை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா கொடூரத்தில் இருந்து பிரான்ஸும் தப்பவில்லை.
வைரஸால் அந்நாடு கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 25,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1331 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பிரான்ஸ் அரசு பெரும் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையில் ஈராக்கில் இருக்கும் தங்கள் நாட்டுப் இராணுவ படைகளைத் திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈராக் அரசு ஒத்துழைப்புடன் பிரான்ஸ் இராணுவ வீரர்களைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.