நியூசிலாந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த குடும்பம் தற்போது தமது சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் விமான சேவைகளை மட்டுப்படுத்தியதுடன், சில நாடுகள் விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளன.
அந்த வகையில் இவர்கள் தமது சொந்த நாடான நியூசிலாந்துக்கு திரும்பிச் செல்ல முடியாமல் கண்டியில் ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியுள்ளனர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் யாரும் இல்லாத அந்த சுற்றுலா விடுதியில் பில் ஸ்டீவன்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாத்திரமே தங்கியுள்ளனர் என்று நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், பில் ஸ்டீவன்சன், அவரது மனைவி கிர்ஸ்டன் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், 13 மற்றும் 17 வயதுடையவர்கள், மார்ச் 9 அன்று நியூசிலாந்தை விட்டு வெளியேறி விடுமுறைக்காக இலங்கைக்குச் செல்வதற்கு முன் சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் கழித்துள்ளனர்.
மேலும் தாம் விடுமுறையை கழிப்பதற்காக கொண்டு வந்த பணமும் நிறைவடைந்த நிலையில் தங்களை சொந்த நாட்டுக்கு எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் பில் ஸ்டீவன்சன்.