யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் இன்றும் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் அனலைதீவை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கான பரிசோதனை இன்று மாலை இடம்பெறுமென வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.