நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கோவிட்-19 வைரஸை கேலி செய்து வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாஷ்வில்லியைச் சேர்ந்த அயர்லாந்து டேட் என்கிற 21 வயது இளம்பெண், உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கோவிட் -19 வைரஸை கேலி செய்து வீடியோ வெளியிட்டதோடு, தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்.
அந்த வீடியோவில், அரசு கூறும் 3 மீட்டர் இடைவெளி விதியை எல்லாம் பின்தொடர மாட்டேன் எனக்கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியான சில நாட்களிலே அவருக்கு சுவாச பிரச்சினைகள், மார்பில் ஒரு இறுக்கம் மற்றும் அதிக நேரம் இருமியதால் வாயிலிருந்து இரத்தம் வருத்தம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற டேட்டுக்கு சோதனை மேற்கொண்டபோது, கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் டேட் தனது பெற்றோருடன் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேலி செய்வதற்கான தனது ஆரம்ப நிலைப்பாட்டை திரும்பப் பெற்ற அவர், மற்றவர்களை கவனமுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.