யாழ்ப்பாணத்தில்மக்களின் நலனுக்காக பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு யாழ் நகரில் உள்ள COSY HOTEL & Restaurant இலவச தங்குமிடங்களை வழங்க முன்வந்துள்ளது.
தற்காலிக வதிவிடத்தில் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திந்திருப்பதாகவும், வாடகை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்ற நிர்ப்பந்தித்த செய்திகள் சில குறித்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறியக்கிடைத்ததை அடுத்து அவர்கள் இவ்வாறு உதவ முன்வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன் யாழிலும் கொரோனா அச்சம் நிலவுகின்ற நிலையில் சமூகநலன் கருதிய எங்களால் முடிந்த பணியை தற்போது நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மக்கள் பணி தீரும் வரை நீங்களும் ஆரோக்கியமாக உங்கள் சேவைகளை எங்கள் மக்களுக்கு தொடர என்றும் துணை நிற்போம் என்றும், மனஉழைச்சலுக்கு ஆளாகாமல் மருத்துவர்களும் தாதியர்களும் தங்கள் பணியை தொடருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தங்களின் விடுதி வைத்தியசாலைக்கு அருகில் இருப்பதால் என தங்குமிடவசித்தி தேவை நினைப்பவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறும் குறித்த விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நிர்வாகம்
தொலைபேசி இல – 0777304545/0212224550