கொரோனா பாதிப்பால் சீனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கையை சமீபத்தில் இத்தாலி முந்திய நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை முந்தியுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 81,340. இந்த எண்ணிக்கையை தற்போது அமெரிக்கா முந்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,079 என பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 100,514 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு ஒரே நாளில் 251 பேர் மரணமடைந்துள்ள நிலையில் மொத்தம் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,546 என பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் தொடர்ச்சியாக சீனாவை விமர்சித்த வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அந்த நாட்டின் உதவியை கோரியுள்ளார். என்பது குறிப்பிட்டதக்கது.