இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் படியும் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டத்தை மதிக்காத பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீதிகளில், பொது வெளியில் சுற்றி திரிகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பொதுமக்கள் வெளியில்சுற்றி திரிபவர்களை பொதுமக்கள் முன்னரே பொலிஸார்கள் தண்டனையை அளித்துவருகின்றனர்.
பொலிஸார்களின் குறித்த செயல்களை முகநூலில் சமூக ஆர்வலர்கள் அடங்காதவர்களுக்கு இப்படி சொன்னால்தான் அடங்குவர்கள் என அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.