பிரித்தானியாவில் இளம் வயது தந்தை, தமது இரண்டாவது மகன் பிறந்த 10-வது நாள் கொரோனாவுக்கு பலியான சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
வேல்ஸ் பகுதியில் குடியிருந்து வந்த 27 வய்து தாமஸ் டேவிஸ் என்பவரே கொரோனா பாதிப்புக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்.
சமூக விலகலை குடியிருப்புக்குள்ளும் கடைபிடிப்பதால் இந்த இக்கட்டான நிலையிலும், தங்களது குடும்ப உறுப்பினர்களை தேற்ற முடியவில்லை என டேவிஸின் தாயார் கண்கலங்கியுள்ளார்.
பிறந்த குழந்தையை கூட ஆசை தீர கொஞ்ச முடியவில்லை என டேவிஸ் தமது மனைவியிடமும் தாயாரிடமும் வருத்தப்பட்டுள்ளார்.
டேவிஸ் சாதாரணமாகவே இருந்து வந்துள்ளார். வியாழனன்று லேசான காய்ச்சலுடன் இருமலும் இருந்துள்ளது.
ஆனால் வெள்ளி அன்று அவரது நிலைமை மிக மோசமாகவும், அன்றைய தினமே மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளார்.
டேவிஸின் மரணம் தங்களை மொத்தமாக உலுக்கியுள்ளது என கூறும் குடும்ப உறுப்பினர்கள், டேவிஸ் மிகவும் ஆரோக்கியமான நபர் எனவும், புகை உள்ளிட்ட எந்த பழக்கமும் அவரிடம் இருந்தது இல்லை எனவும், தமது பிள்ளைகள் என்றால் அவருக்கு உயிர் எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியர்கள் இன்னமும் கொரோனா வைரஸ் பாதிப்பின் உக்கிரம் தொடர்பில் புரிதல் இல்லாமல் உள்ளனர்.
அவர்கள் கண்டிப்பாக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் டேவிஸின் குடும்பம் கேட்டுக்கொண்டுள்ளது.