சீனா வுஹான் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது.
Wei Guixian என்ற 57 வயதான பெண்மணியே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான முதல் நபர்.
வுஹான் சந்தையில் இறால் விற்கும் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.
ஆனால் பொதுவாக தனக்கு அடிக்கடி வரும் குளிர் ஜுரம் என்றே இதையும் கருதியுள்ளார். இதனையடுத்து உள்ளூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சென்று இருமல் மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து இறால் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். இவரே வுஹான் முழுவதும் பின்னர் உலகம் முழுவதும் பல ஆயிரம் பேர் சாவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அந்த காய்ச்சலுக்கு பின்னர் தமக்கு கடுமையான உடல் சோர்வு இருந்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட காய்ச்சலின் போது இருந்த அளவுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குளிர்காலத்திலும், நான் எப்போதும் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறேன். எனவே இதுவும் சாதாரண காய்ச்சல் என்று கருதியதாக Wei தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றாலும், அவருக்கு குணமாகவில்லை என்றும், தொடர்ந்து டிசம்பர் 16 ஆம் திகதி வுஹான் சிற்றி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இவரை பரிசோதித்த அங்குள்ள மருத்துவர், இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் மிகவும் ஆபத்தானது எனவும், வுஹான் மாமிச சந்தையில் இருந்து இதே அறிகுறிகளுடன் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து டிசம்பர் இறுதியில் வுஹான் சிற்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் Wei அனுமதிக்கப்பட்டார்.
ஜனவரியில் பூரண குணமடைந்த Wei, தாம் பாதிக்கப்பட்டது கொரோனா வைரஸ் எனவும், வுஹான் சந்தையில் அமைந்துள்ள பொது கழிவறையில் இருந்து பரவி இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட முதல் 27 நோயாளிகளில் 24 பேர் வுஹான் சந்தையில் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டியது.
Wei மட்டுமின்றி அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர்களும் இந்த விசித்திர காய்ச்சலுக்கு இலக்கானார்கள்.
சீனத்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், இந்த கய்ச்சல் சீனாவுடன் கட்டுக்குள் வந்திருக்கும் எனவும், உலக அளவில் பரவ வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் சீனத்து தனியார் மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்ட தகவலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான நபர் தொடர்பில் டிசம்பர் 1 ஆம் திகதியே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு வுஹான் சந்தையுடன் எந்த தொடர்பும் இல்லை என்ற ஒரு வாதத்தையும் முன்வைத்துள்ளது.