இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தன் மூலம் ஏனையவர்களிற்கும் வைரஸ் தொற்றியதாக அச்சமடைந்த டேனீலா ட்ரெஸி என்ற 34 வயதான தாதியே இந்த விபரீத முடிவை எடுத்தார்.
இத்தாலில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட லோம்பார்டியின் மோன்சாவில் உள்ள சான் ஜெரார்டோ மருத்துவமனையில் அவர் தாதியாக பணிபுரிந்தார்.
இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது வைரஸை தான் பரப்புகிறார் என்ற அச்சத்தின் மத்தியில் டேனீலா ட்ரெஸி “கடுமையான மன அழுத்தத்தை சந்தித்ததாக கூறப்படுகின்றது
கொரோனா தொற்றிற்குள்ளான பின்னர் அவர் தனிமைப்படுத்தலில் இருந்தபோது தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 10 முதல் உடல்நிலை சரியில்லாமல் ட்ரெஸி வீட்டில் இருந்ததாகவும், இதன்போதே தற்கொலை செய்தார்.
இந்த நிலையில் ட்ரெஸியின் மரணம் குறித்து இத்தாலியின் தேசிய தாதியர் கூட்டமைப்பு தனது “வேதனையையும் திகைப்பையும்” வெளிப்படுத்தியது.
இதேவேளை கடந்த சில நாட்களின் முன்னர் வெனிஸ் நகரத்திலும் ஒரு தாதி தற்கொலை செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.