ஹெலிகொப்டர் மூலம் கொழும்பில் தெளிக்கப்பட்டது என்ன?கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் இன்னுமொரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையினை அரசாங்கம் நேற்று மேற்கொண்டது.
அந்தவகையில் தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டது.