கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு கொழும்பின் புறநகராகிய ஹோமாகம மருத்துவமனையில் ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளர்களை அறையில் சென்று பார்த்து வருதல், மருத்துவ அறிக்கை செய்ய உதவுதல், மருத்துவர்களின் ஆலோசனைகளை நோயாளர்களுக்கு வழங்குதல், மருந்துகளை வழங்கல் போன்ற செயல்பாடுகள் இந்த ரோபோ மூலம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ரோபோவை இலங்கை தொழில்நுட்ப நிறுவனமொன்று தயாரித்திருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றமை இன்னுமொரு ஆச்சரியமான செய்தியாகும்.
இதற்காக ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கின்ற அதிகாரிகள், இந்த ரோபோக்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதாயின் 5 மில்லியன் ரூபா வரை செல்லும் என்றும் கூறியிருக்கிறார்கள்.