கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ளவர் என புகழப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டார் என்று பிரித்தானியா உறுப்பு மாற்று சிகிச்சை சங்கம் தெரிவித்துள்ளது.
63 வயதான டாக்டர் ஆதில் எல் தயார் சவுதி அரேபியா, சூடான் மற்றும் தெற்கு லண்டன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்.
டாக்டர் எல் தயார் மார்ச் மாதத்தில் கொரோனா அறிகுறிகளை காட்டிய பின்னர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார், மார்ச் 20 அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் 25 அன்று மேற்கு லண்டனின் இஸ்லேவொர்த்தில் உள்ள வெஸ்ட் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் சூடானுக்கான பிரிட்டிஷ் தூதரும் ஒருவர்.
Saddened to hear of #Sudan-ese doctor Adel Altayar's death in the UK from Covid-19. Health workers around the world have shown extraordinary courage. We cannot thank them enough. In this fight we must listen to their advice. #coronavirus #StayAtHome https://t.co/MGzehDylZX
— Irfan Siddiq (@FCOIrfan) March 26, 2020
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதியான பின்னர் ஆதில் எல் தயார் தனது இறுதி நாட்களை தீவிர சிகிச்சையில் கழித்தார் என்று அவரது உறவினர் டாக்டர் ஹிஷாம் எல் கிதிர் கூறினார்.
இந்த நோய் பயங்கரமானது, மேலும் எதிர்வரும் வாரங்களில் பல குடும்பங்களுக்கு இழப்பை ஏற்படுத்தப் போகிறது,
ஆதில் எங்கள் குடும்பத்தின் முக்கிய நபராக இருந்தவர், அவர் பலரால் மதிக்கப்படுபவர்.
அவர் இறந்ததிலிருந்து அவரது சகாக்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான இரங்கல் குறுஞ்செய்திகள் எனக்கு வந்துள்ளன என ஹிஷாம் எல் கிதிர் கூறினார்.
டாக்டர் எல் தயார் 1982 இல் கார்ட்டூம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், 1996 இல் இங்கிலாந்து சென்றார், பின்னர் அவர் மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
2007 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன்பு, டூட்டிங்கின் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார், சவுதியில் அவர் ஜெட்டாவில் உள்ள கிங் ஃபஹத் பொது மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
2011 ஆம் ஆண்டில், டாக்டர் எல் தயார் தனது சொந்த நாடான சூடானுக்கு திரும்பி ஒரு மாற்றுத் திட்டத்தை நிறுவ உதவினார் மற்றும் இப்னு சினா மருத்துவமனை கார்ட்டூமில் பணிபுரிந்தார்.
அவர் இறப்பதற்கு முன் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் ஒரு லோகம் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்தார். டாக்டர் எல் தயார் ஒரு “உன்னத மனிதர்” அறுவை சிகிச்சை நிபுணர் அப்பாஸ் கஸன்பார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.