இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் 21 நாள் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பசிக்கு புற்களை தின்ற சிறார்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் நாடு மொத்தம் முடக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை மட்டும் விடுத்து எஞ்சிய அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆளும் மோடி அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், இந்த தினக்கூலி தொழிலாளர்கள் மத்தியில் பசியும் ஏழ்மையும் பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் முஷார் சமூகத்தை சேர்ந்த சில சிறார்கள் பல நாட்கள் பசியாக இருந்த காரணத்தால் akri எனப்படும் ஒருவகை புல்லை உப்பு சேர்த்து உணவாக சாப்பிட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த பகுதியில் உள்ள பத்து குடும்பங்களை சேர்ந்த சிறார்கள் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் புல்லை உணவாக ஊண்ட சம்பவம் நாடு முழுவதும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் வாரணாசி நகர நிர்வாக அதிகாரிகள் குறித்த குடும்பங்களை அணுகி உணவுக்கான ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் 21 நாட்களுக்கும் சேர்த்து அந்த 10 குடும்பங்களுக்கு 15 கிலோ உணவுப் பொருட்களை மட்டுமே வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.