தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 933 ஆக உயர்ந்துள்ளது. அதில் 84 பேர் குணமடைந்துள்ள நிலையில் 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் 42 வயதானவர். கும்பகோணத்தைச் சேர்ந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மற்றொருவர், 49 வயதானவர் காட்பாடியில் சேர்ந்த அவர் ஒரு பாதிரியார். வேலூரிலுள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, மத்திய கிழக்கு நாடுகள் வழியே, காட்பாடி திரும்பியுள்ளார்.
இன்னொருவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர். அவர் வெளிநாட்டுக்குப் போய் வந்தவரா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு இளைஞருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு வயது 25. இந்த இளைஞர் வெளிநாடு ஏதேனும் போய் வந்தவரா என்பது தெரியவில்லை.
சென்னையில் மட்டும் ஏற்கனவே 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படு வருகிறார்கள். இதில், ரத்த மாதிரிகள் சோதனைக்கு பிறகுதான், அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.
#CoronaUpdate: #Covid_19 positive confirmed for 25 Y M from West Mambalam, Chennai. Pt is undergoing treatment in isolation at a Private Hospital. His condition is stable @MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 28, 2020