14 நாட்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட வர்களுள் 130 பேர் நாளை தமது வீடுகளுக்கு செல்லவிருப்பதாக இராணுவத் தளபதி சவேச்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த 77 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இதுவரையில் 1665 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை பூர்த்தி செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என அவர் கூறினார்.
தற்பொழுது 2096 பேர் இந்த நிலையங்களில் இருந்து வருகின்றனர். இவர்களில் 130 பேர் நாளை வீடு திரும்பவுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.