சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்திர மருந்துகளை வீடுகளிற்கே விநியோகிக்க முடிவு செய்துள்ளது.
வடமாகாணாத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலாவது அல்லது அரச நடமாடும் கிளினிக் நிலையங்களிலாவது பதிவு செய்து மாதாந்தம் மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது கிளினிக் நடைபெறுகின்ற வைத்தியசாலைகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்.
வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்கள் தெரியாவிடின் உங்களது மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- 021 221 7278
வவுனியா- 024 222 2893
கிளிநொச்சி- 021 228 5933
மன்னார்- 023 222 2916
முல்லைத்தீவு- 021 229 0102
வைத்தியசாலையைத் தொடர்புகொண்டு நீங்கள் உங்களது பின்வரும் தகவல்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
முழுப் பெயர்
வயது
பால்
சிகிச்சை பெறும் வைத்தியசாலை
சிகிச்சை பெறும் கிளினிக்
கிளினிக் இலக்கம் (உங்கள் கிளினிக் கொப்பியில் எழுதப்பட்டிருக்கும்)
உங்களது தபால் முகவரி
உங்களைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கம்
உங்களது மருந்துகள் உங்களைத் தேடி உங்களது வீட்டிற்கு வரும்.