பாகிஸ்தான் ஸ்குவாஷ் ஜாம்பவான் அசாம் கான் லண்டனில் கொரோனா வைரஸால் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1959 மற்றும் 1961 க்கு இடையில் பிரிட்டிஷ் ஓபன் பட்டத்தை அடுத்தடுத்து வென்ற அசாம், கடந்த வாரம் கொரோனா உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மார்ச் 28ம் திகதி அவர் லண்டனின் ஈலிங் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 95.
புகழ்பெற்ற ஹஷிம் கானின் இளைய சகோதரரான ஆசாம் உலகின் சிறந்த ஸ்குவாஷ் வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.
காயம் மற்றும் 1962ல் தனது 14 வயது மகனின் துயர மரணம் காரணமாக அவர் ஸ்குவாஷ் விளையாடுவதை விட்டுவிட்டார்.
இரண்டு வருடங்களுக்கு பின் அவர் காயங்களிலிருந்து குணமடைந்தாலும், தனது மகன் மரணத்தினால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீள் முடியவில்லை என ஆசாம் கூறினார்.
பெஷாவருக்கு புறநகரில் உள்ள சிறிய கிராமமான நவாக்கில் ஆசாம் பிறந்தார், சகோதரர்கள் ஜஹாங்கிர் மற்றும் ஜான்ஷர் கான் போன்ற ஸ்குவாஷ் உலக சாம்பியன்களும் நவாக்கில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாம் 1956 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறினார். அவர் மிக முக்கியமான அமெரிக்கா ஓபனையும் வென்றார்.