அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் உயிரிழப்புகள் உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 1.41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 2,484 ஆக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 518 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவமனைகளில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 100 நாட்களில் 1 லட்சம் கருவிகள் உற்பத்தி செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்னும் இரு வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்புகளை அதிகரிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் இன்னும் இரு வாரங்களில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே சமூக விலகலை கடைப்பிடித்தல் அவசியமாகிறது. இதனால் அமெரிக்காவில் ஊரடங்கை வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது.
வரும் ஜூன் 1-ஆம் திகதி முதல் கொரோனாவிலிருந்து நாம் முழுவதுமாக மீள்வோம் என தெரிவித்துள்ளார்.