பிரித்தானியாவில் கொரோனாவுக்கு எதிரான முடக்குதல் நடவடிக்கையின் இடையே NHS செவிலியர் ஒருவர் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்ன்ஸ்லி, தெற்கு யார்க்ஷயர் பகுதியில் குடியிருக்கும் 3 பிள்ளைகளின் தாயாரான 31 வயது விக்டோரியா உட்ஹால் என்பவரே ஞாயிறன்று பட்டப்பகலில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டவர்.
சுமார் 5 மணியளவில் அக்கம்பக்கத்தினரின் அலறல் சத்தம் கேட்டதுடன், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய ஒருவரைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் ஒருவர் உதவி கோரியுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை தமது 13-வது பிறந்தநாளை கொண்டாடும் மகளுடன் சில நாட்களை செலவிட வேண்டும் என்பதற்காக விக்டோரியா விடுப்பு எடுத்திருந்துள்ளார்.
சுமார் 5.15 மணிக்கு விக்டோரியாவின் முன்னாள் கணவர் Gareth Cowley அவருக்கு தொலைபேசியில் குறுந்தகவல் ஒன்றும் அனுப்பியுள்ளார்.
அதேவேளை அக்கம்பக்கத்தினர் ஒருவர் விக்டோரியாவின் மகளுக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.
விக்டோரியா மர்ம நபரால் தாக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செவிலியர்கள் கொரோனா தொற்றை நாட்டின் உள்ளே பரப்புவதாக எழுந்த புரளியை அடுத்து தற்போது இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பல நாடுகளில் நடந்தேறி வருவது குறிப்பிடத்தக்கது.