அண்டை நாட்டினுள் உள்ள எரிவாயு குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் துருக்கிக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இன்று காலை, துருக்கியுடனான ஈரானின் பஸர்கன் எல்லைக்கு அருகே துருக்கிக்குள் இயற்கை எரிவாயு குழாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது என்று தேசிய ஈரானிய எரிவாயு நிறுவனத்தின் இயக்குனர் மெஹ்தி ஜம்ஷிடி-டானா கூறினார்.
கடந்த காலத்தில் பல முறை குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பி.கே.கே குழு இந்த குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று சட்டவிரோத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைக் குறிப்பிடுட்டுள்ளார்.
3/ #BREAKING VIDEO
Explosion hits #Iran's gas pipeline to #Turkeythe gas terminal exploded,In Turkey side,at the Iran’s bazargan border with Turkey
the flames of this explosion continue since last night
No one claimed responsibility yet#BreakingNews #NewsAlert #SaudiArabia pic.twitter.com/MbE3ViJ48R— Botin Kurdistani (@kurdistannews24) March 31, 2020
ஆண்டுதோறும் சுமார் 10 பில்லியன் கன மீட்டர் ஈரானிய வாயுவை துருக்கிக்கு கொண்டு செல்லும் இந்த குழாய், 1990 களில் குர்திஷ் போராளிகளால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளானது மற்றும் 2013 வரை போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது வரை தாக்குதல் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.