வட கொரியா அரசியல் கைதிகளின் சடலங்களை தனது பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.
சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் தலைமையிலான வட கொரியா, சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய உயர்வை கண்டது.
இந்த நிலையில் அதற்கு பின்னல் இவ்வாறானதொரு பயங்கரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
Kim Il என்ற புனைப்பெயரைப் பயன்படுத்திய முன்னாள் கைதி, பியோங்யாங்கிற்கு வடக்கே அமைந்துள்ள கெய்கோன் வதை முகாமின் நரகத்திலிருந்து தப்பியபின் அங்கு இடம்பெற்ற கொடூரமான சம்பவம் குறித்து அம்பலப்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளை முடுக்கிவிட்ட நிலையில், ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்த நேரத்தில் குறித்த கைதி தெரிவித்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவில் உள்ள நிலங்கள் அதிக உரமூட்டப்பட்டவை மற்றும் விவசாயம் அங்கு வெற்றிகரமாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஏனெனில் புதைக்கப்பட்ட மனித உடல்கள் இயற்கை உரங்களாக செயல்படுகின்றதாக கூறியுள்ளார்.
அத்துடன் மக்களை மலைப்பகுதிகளில் கூட வடகொரியா புதைத்துள்ளதாகவும், ஒருமுறை, ஒரு குழந்தை மலைகளில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் உடலை புதைக்கும்போது அவர்கள் அதை சரியாக மறைக்க மறந்துவிட்டதே அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை முன்னதாக இதேபோன்ற குற்றசாட்டை தென் கொரியாவின் சியோலுக்கு தப்பிச் சென்றபின், வட கொரியாவில் உள்ள மனித உரிமைகளுக்கான குழு (HRNK)-க்கு கிம் மனைவி தனது அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.