லண்டனில் பொலிசாரிடம் சென்று இருமியபடி எச்சிலை வெளியில் வரவழைத்து தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
வடக்கு லண்டனில் உள்ள Seven Sisters சாலையில் இரு தினங்களுக்கு முன்னர் பொலிசார் தங்கள் வாகனத்தில் இருந்தனர்.
அப்போது 24 வயது இளைஞன் பொலிசார் அருகில் வந்து தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறி கத்தினார்.
பின்னர் அவர்கள் அருகில் சென்று இருமியவாறு எச்சிலை துப்பினார்.
இதோடு பொலிசாரையும் அடிக்க முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இளைஞனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாவுக்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்பது உறுதியானது.
அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் அடுத்த மாதம் 10ஆம் திகதி அந்த இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.