கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் யாருக்கேனும் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சந்தேகம் இருந்தால், வீட்டில் இருந்தே பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இன்றி அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற முயற்சித்தால் கொரோனா நோயை பரபரப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உங்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சந்தேகம் இருந்தால் தயவு செய்து வைத்தியவசாலைக்கு வர வேண்டாம். வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு அவசியமாக வசதிகளை நாங்கள் ஏற்படுத்துவோம். பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள். சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறின்றி வைத்தியசாலைக்கு சென்றால் அது கொலை முயற்சி சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும். இதனால் தீங்கிழைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம். தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளுங்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.