கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதாக Steadley Kerr என்பர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி Scarboroughவில் 38 வயதான தீபா சீவரத்னம், அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வன்முறையின் போது தீபாவின் தாயார் பாரிய காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட தீபா சீவரட்னம் யாழ்ப்பாணம் கொற்றாவத்தை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.