பிரித்தானியாவில் உள்ள தேவாலயம் ஒன்று அதன் விசுவாசிகளுக்கு கொரோனா தொற்றில் நிருந்து தப்பிக்க பாதுகாப்பு கவசம் விற்பனை செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனின் கேம்பர்வெல் பகுதியில் அமைந்துள்ள கிங்டம் தேவாலயத்தின் தலைவரான பிஷப் க்ளைமேட் வைஸ்மேன் என்பவரே விசுவாசிகளுக்கு 91 பவுண்டுகள் கட்டணத்தில் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கவசம் விற்பனை செய்தவர்.
மேலும் தாம் அளிக்கும் சிறிய எண்ணெய் போத்தல் மற்றும் சிவப்பு நூல் துண்டு கொரோனாவில் இலிருந்து தமது விசுவாசிகளை பாதுகாக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த எண்ணெய் மற்றும் நூல் துண்டை உடன்பில் அணிந்திருந்தால் கண்டிப்பாக கொரோனா உங்களை அணுகாது எனவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், விவிலியத்தில் குறிப்பிட்டுள்ளபடியே, தாம் கொரோனாவுக்கு எதிரான எண்ணெய் தாயார் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், விற்பனையை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பல நாடுகளில் உயிர்ப்பலி வாங்கும் கொரோனா வைரஸ் தொடர்பில், விசுவாசிகளின் பயத்தை சாதகமாக பயன்படுத்தி அதை வியாபாரமாக்குவது இழிவான செயல் என பொதுமக்களில் பலரும் கண்டித்துள்ளனர்.
மேலும், அரசு நிர்வாகம் தொடர்பில் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உரிய மருத்துவ சிகிச்சையே கொரோனாவை எதிர்கொள்ள சிறந்த தீர்வு எனவும், இதுபோன்ற மோசடிகளுக்கு மக்கள் பலியாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.