சீனாவில் தொடங்கிய வைரஸ் இன்று உலகில் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வைரசுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளது.
இதற்கு என்ன காரணம்? வளர்ச்சி அடைந்த நாட்டுக்கு இந்த நிலைமை ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை.
கடந்த ஜனவரி 29ம் திகதி சீனாவிலிருந்து இத்தாலி வந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அடுத்த நாளே 6 மாத அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் பிரதமர்.
அடுத்ததாக சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இத்தாலி தடை விதித்தாலும் அதன் எல்லைகளை மூடவில்லை.
ஜனவரி மாத தொடக்கத்திலேயே கொரோனா தொற்று இத்தாலிக்குள் நுழைந்திருக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்திருக்கலாம், சிலருக்கு அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா தொற்று என தெரியாமல் மருத்துவம் பார்த்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இவர்கள் கூற்றை மெய்பிக்கும் விதமாக கடந்த சில மாதங்களில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இத்தாலியில் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
அவர்களை தனிமைப்படுத்தாமல் விட்டால் சுமார் 22 பேருக்கு அந்நோயை பரப்ப நேரிடும்.
இதுமட்டுமின்றிஅவசர நிலை, ஊரடங்கு என உத்தரவ பிறப்பிக்கப்பட்டாலும் வணிக வளாகங்கள், கேளிக்கை மையங்கள்என பல தொழிற்சாலைகள் தொடந்து இயங்கின.
பொருளாதாரத்தைக ருத்தில் கொண்டு இதற்கு அனுமதி அளித்ததும் இந்த பாரிய விளைவிற்கு காரணம் என கூறப்படுகிறது.
மிக முக்கியமாக அந்நாட்டின் சராசரி வயது அதிகமாக இருப்பதும் அதிகமான உயிரிழப்புக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.