இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை அளிக்க வந்த சுகாதார ஊழியர்கள் பொதுமக்கள் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றதாக தெரியவருகிறது.
குறித்த காட்சியை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த வீடியோவில், தெரு ஒன்றில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து வரும் சுகாதார ஊழியர்களை கண்ட மக்கள், அவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடிக்கின்றனர்.
இந்த இக்காட்டான சூழ்நிலையிலும் குடும்பத்தை மற்றும் தங்களது உயிரை பற்றி கவலைபடாமல் சிகிச்சையளிக்க பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை இப்படி நடத்துவது படுமோசம்.
इस भयावह स्थिति में भी अपने परिवार और जान की चिंता किये बिना जन सेवा कर रहे डॉक्टर और मेडिकल स्टाफ के साथ इस प्रकार का व्यवहार!
कसूर सिर्फ इतना कि कोरोना के मरीज़ की सहायता की। साफ़ दर्शाता है की अभी भी लोगों को आपदा कितनी बड़ी है समझ नहीं आ रहा। हद्द है! कार्यवाही होनी चाहिए! pic.twitter.com/51VDvu9mWa
— Swati Maliwal (@SwatiJaiHind) April 2, 2020
அவர்கள் கொரோனா நோயாளிக்கு உதவி வருகின்றனர். கொரோனா எத்தகைய பேரழிவு என்று மக்கள் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுவாதி மலிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1,998 ஆக அதிகரித்துள்ளது.