கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட கனடிய பிரதமரின் மனைவி Sophieயும் டிரம்ப் மனைவி மெலானியாவும் போனில் பேசியதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து தான் குணமடைந்துவிட்டதாக கடந்த சனிக்கிழமை Sophie அறிவித்தார்.
இதன்பின்னர் அவர் பிரபலங்களுடன் பேசியதாக அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த சூழலில் அமெரிக்காவின் முதல் பெண்ணான டிரம்ப் மனைவி மெலானியா, Sophie-க்கு போன் செய்து பேசியுள்ளார் என அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கொரோனாவில் இருந்து மீண்ட Sophie-வின் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்த மெலானியா அவர் நலமாக இருப்பதை அறிந்து கொண்டதோடு எப்போதும் அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் கொரோனா தொடர்பான சவால்களை எதிர்கொள்ள தொடர்ந்து அமெரிக்காவும், கனடாவும் இணைந்து செயல்படும் என இருவரும் பேசியுள்ளனர்.
மேலும் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வலுவான பொருளாதார உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் மெலானியா டிரம்ப் Sophieயிடம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.