தம்புள்ளை – கலேவெல பகுதியில் பெண் ஒருவரிடமிருந்து 40 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோனின் பெறுமதி 5 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.