தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 288 பேர் இன்று (03) அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தியத்தலாவ, ரன்தம்பே, குண்டசாலை, போகொட, பெரியபாடு, தந்திரிமலை ஆகிய தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி, லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளவர்களில் 9 தேரர்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய, 2598 பேர் இதுவரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்த கொழும்பு மருதானை, பேருவளை, கொச்சிக்கடை பகுதிகளை சேர்ந்த சுமார் 550 பேர் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இராணுவ தளபதி லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.